19.3 C
New York
Tuesday, September 22, 2026

450 பணியிடங்களைக் குறைக்கிறது ‘சன்ரைஸ்’ நிறுவனம்.

சுவிஸ் தொலைத்தொடர்பு நிறுவனமான ‘சன்ரைஸ்’ மேலும் 450 பணியிடங்களைக் குறைக்கும் வகையில் ஒரு பெரிய அளவிலான பணிநீக்க நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான இது, இந்த பணிநீக்கம் தற்போதைய மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 16%-க்கும் சற்று குறைவானது என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

விரிவான வணிக மாதிரி மறுஆய்வின் பின்னணியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. “வளர்ந்து வரும் சந்தை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை முன்கூட்டியே எதிர்கொள்வதே” இதன் நோக்கமாகும்.

விற்பனை நிலையங்கள், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பெரும்பாலும் இந்தப் பணிநீக்க நடவடிக்கையிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும், பயிற்சிப் பணியாளர்கள் (apprentices) பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியது.

2026-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் ‘சிண்டிகாம்’ (Syndicom) தொழிற்சங்கத்துடன் சட்டப்பூர்வமான கலந்தாலோசனை செயல்முறையை மேற்கொள்ள இந்தநிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் 147 பணியிடங்களைக் குறைப்பதாக இந்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது; அந்த நடவடிக்கை கோடைக்காலத்தில் நிறைவடைந்தது.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையையும் சேர்த்தால், மொத்த பணிநீக்கங்களின் எண்ணிக்கை 600-ஐ எட்டும். ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட பணிநீக்கங்கள் மட்டுமே ஊழியர்களுக்கான செலவை சுமார் 5% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜானி ஃப்ரூட்டியர் (Jany Fruytier) கடந்த ஓகஸ்ட் மாதம் AWP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles