சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 4.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. சுவிஸ் நில அதிர்வு கண்காணிப்பு மையத்தின் (SED) தகவல்படி, இந்த நிலநடுக்கம் மத்திய சுவிஸில் உள்ள கிளாரஸ் (Glarus) மாகாணத்தின் லின்தால் (Linthal) பகுதிக்கு மேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4:37 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, பூமிக்கு அடியில் சுமார் 2.4 முதல் 5.3 கி.மீ என்ற மிகக் குறைந்த ஆழத்தில் ஏற்பட்டதால் சுவிட்சர்லாந்து முழுவதும் பரவலாக உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 10 நிமிடங்களுக்குள் அதே பகுதியில் 1.0 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய அதிர்வும் பதிவாகியுள்ளது. 4.0 அளவிலான நிலநடுக்கங்களால் மையப்பகுதிக்கு அருகில் சிறிய அளவிலான கட்டிடச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ள போதிலும், தற்போதைக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது



