நைஜீரியாவில் சுவிஸ் பெண் ஒருவருக்கு எபோலா தொற்று ஏற்பட்டுள்ளது. சுவிஸ் பெண்ணுக்கு எபோலா தொற்று ஏற்பட்டுள்ளதை சுவிஸ் வெளியுறவு அமைச்சு உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகள் உண்மையானவை. பாதிக்கப்பட்ட பெண், நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் உள்ள தூதரகத்தில் பணிபுரியும் ஒரு சுவிஸ் ஊழியரின் மனைவி ஆவார்.

அந்தப் பெண் அபுஜாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ளார். அங்கு அவர் சுமார் ஒரு வாரமாக தனது அறிகுறிகளுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு ஒக்டோபர் 20ஆம் திகதி நோய் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு உகாண்டாவுக்குப் பயணம் செய்தபோது அவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவரது கணவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், ஆனால் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இந்தத் தம்பதியினர் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்குப் பயணம் செய்யவில்லை என்றும், சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo


