ஆளும் கூட்டாட்சி மன்றத்தில் கை பார்மெலினுக்குப் பதிலாக அமைச்சர் பதவிக்கு, ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் வேட்பாளர்களாகத் தங்களை முன்மொழிந்துள்ளனர்.
இன்று நண்பகல் காலக்கெடு முடிந்த பின்னர், சுவிஸ் மக்கள் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழு வேட்பாளர்களை அறிவித்தது.

பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்திலிருந்து இரண்டு வேட்பாளர்களும், டிசினோவிலிருந்து ஒரு வேட்பாளரும், ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்திலிருந்து ஐந்து வேட்பாளர்களும் கூட்டாட்சி மன்ற இடத்திற்காகப் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தோமஸ் ஏஸ்கி (சூக்), மைக்கேல் கிராபர் (வலே), ரெமி வைஸ்மான் (சொலோதூர்ன்), செலின் அமாட்ரூஸ் (ஜெனீவா), மார்கோ சியேசா (டிசினோ) மற்றும் மாகாண அரசாங்க உறுப்பினர்களான ஜீன்-பியர் கல்லாட்டி (ஆர்காவ்), ஃபிரான்ஸ் ரூப்பன் (வலே) மற்றும் பியர் அலைன் ஷ்னெக் (பெர்ன்) ஆகியோர் கூட்டாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சுவிஸ் மக்கள் கட்சியின் முன்னாள் நாடாளுமன்றக் குழுத் தலைவர் காஸ்பர் பாடரின் தலைமையில், வரும் வாரங்களில் அனைத்து வேட்பாளர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். தேவைப்பட்டால் மற்ற நபர்களையும் அணுகுவதற்கான உரிமையை இக்குழு கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களைப் பொறுத்தவரை, வேட்பாளர்களின் தலைமைத்துவ அனுபவமும் திறன்களும் இந்த மதிப்பீட்டில் மைய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தேர்வுக் குழு குறிப்பிட்டது. நவம்பர் 20 அன்று, கூட்டாட்சி மன்றத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் பட்டியலை நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும்.
மூலம்- swissinfo


