சுவிட்சர்லாந்தின் ‘எடல்வைஸ்’ (Edelweiss) விமான நிறுவனம் இலங்கைக்கான குளிர்கால விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.
முதலாவது ஏ-340 (A340) ரக எயார்பஸ் விமானம், 290 பயணிகள் மற்றும் 16 விமானப் பணியாளர்களுடன், நேற்று காலை 7.50 மணிக்கு சூரிச்சிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் 2027 மே 15ஆம் திகதி வரை சூரிச் – கட்டுநாயக்க இடையே 65 விமானப் பயணங்களை மேற்கொள்ள ‘எடல்வைஸ்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஏ-340 விமானங்களுடன் ஏ-350 (A350) ரக விமானங்களையும் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையே விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
முதலாவது விமானத்தில் வந்த பயணிகளை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை மற்றும் விமான நிலைய, விமான சேவைகள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.


