சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள மத்திய புகலிட மையத்தில் (Federal Asylum Centre) திங்கள்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. புகையைச் சுவாசித்ததால் நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக, சூரிச் குடிமைப் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணித்துறை (Zurich Civil Protection and Rescue Service) உறுதிப்படுத்தியுள்ளது.
கிடைத்த தகவல்களின்படி, தீ விரைவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மாலை 7 மணியளவில், வளாகத்தில் இருந்த புகையை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அவசர கால சேவைப் பிரிவைச் சேர்ந்த அம்புலன்ஸ், தீயணைப்புப் படை மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட பெரும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தனர்.

மாலை 5 மணியளவில் சூரிச் நகரக் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக அதன் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் காவல்துறையினரால் எந்தத் தகவலையும் தெரிவிக்க முடியவில்லை.
மூலம்- swissinfo


