12.5 C
New York
Thursday, November 12, 2026

24 கரட் ‘பல்காரி பிங்க்’ வைர மோதிரம் ஜெனிவாவில் 12.1 மில்லியன் பிராங்கிற்கு ஏலம்.

‘மோனா லிசா’ என்று வர்ணிக்கப்படும், மிகவும் அரிதான 24 கரட் ‘பல்காரி பிங்க்’ (Bulgari Pink) வைர மோதிரம், ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில் 12.1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனையானது.

இந்த ஏல நிறுவனத்தின் நகைப்பிரிவுத் தலைவரான மக்ஸ் ஃபாவ்செட், இந்த அரிய வகை வைரத்தின் இணையற்ற தூய்மையையும் ஒளி ஊடுருவும் தன்மையையும் குறிக்க, ‘மோனா லிசா’ என்ற ஒப்பீட்டைப் பயன்படுத்தினார்.

- Advertisement -

ஏலத்திற்கு முன்னதாக, இதன் மதிப்பு சுமார் 15 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், 10 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் மதிப்புள்ள பொருட்களை வாங்கும் சேகரிப்பாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று ஃபாவ்செட் ‘டிபிஏ’செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். எனவே, இந்த விற்பனை விலையில் அனைவரும் திருப்தியடைந்தனர்.

கிறிஸ்டிஸ் (Christie’s) ஏல நிறுவனத்தின் தகவல்படி, இந்த நகை சுமார் 70 ஆண்டுகளாக ஐரோப்பிய பிரபுத்துவ குடும்பம் ஒன்றின் வசம் இருந்தது. முந்தைய உரிமையாளரின் முன்னோர்களில் ஒருவர், இந்தியாவில் இந்த வைரத்தை மூலக் கல்லாக வாங்கி, ‘பல்காரி’ (Bulgari) நகை நிறுவனத்தின் மூலம் அதைப் பட்டை தீட்டி, பிளாட்டினம் மோதிரத்தில் பதித்து வைத்திருந்தார்.

இந்த விலையுயர்ந்த நகை யாருடைய கையை அலங்கரிக்கப் போகிறது என்பது குறித்த விவரங்களை கிறிஸ்டிஸ் நிறுவனம் வெளியிடவில்லை. “இந்த மோதிரம் ஒரு பரிசாக வழங்கப்பட உள்ளது, மேலும் இது அணியப்படவும் போகிறது” என்று மட்டும் ஃபாவ்செட் தெரிவித்தார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles