‘S’ அந்தஸ்து (S status) கொண்ட உக்ரேனியர்கள், சுவிட்சர்லாந்திலிருந்து வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து சுதந்திரமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சுவிஸ் அரசாங்கம் இது குறித்த தனது வரைவுத் திட்டத்தை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த பயணக் கட்டுப்பாடுகள், தஞ்சம் கோருபவர்கள் மற்றும் தற்காலிக அனுமதி பெற்ற பிற நாட்டு குடிமக்களுக்கு பொருந்தும்.
இவர்கள், கொள்கையளவில், இனி தங்கள் சொந்த நாட்டிற்கோ, தாங்கள் வந்த நாட்டிற்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ பயணம் செய்ய முடியாது.
அரச இடம்பெயர்வு செயலகம் (SEM) மிக அரிதான மற்றும் விதிவிலக்கான சூழல்களில் மட்டுமே இத்தகைய பயணங்களுக்கு அனுமதி வழங்கும்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு 2021-ஆம் ஆண்டிலேயே நாடாளுமன்றம் கூட்டாட்சி கவுன்சிலைக் (Federal Council) கேட்டுக்கொண்டிருந்தது.
இருப்பினும், 2022 மார்ச் மாதம் உக்ரேனியர்களுக்காக ‘S’ பாதுகாப்பு அந்தஸ்து நடைமுறைக்கு வந்ததால், இந்த புதிய விதிமுறையை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த ‘S’ அந்தஸ்து, அவர்களுக்கு சுதந்திரமாகப் பயணம் செய்யும் உரிமையை வழங்குகிறது.
‘S’ அந்தஸ்து கொண்டவர்கள் தொடர்ந்து இந்த சுதந்திரத்தைப் பெறுவார்கள். ‘S’ அந்தஸ்து நடைமுறையில் இருக்கும் வரை, இந்த சிறப்பு ஏற்பாடும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
மூலம்- swissinfo


