சுவிட்சர்லாந்தின் பாசல்-கண்ட்ரி மாகாணத்தில் நடந்த இணையவழித் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை தாண்டிப் பயணிப்பவர்களுக்கான பணி அனுமதிகள் தொடர்பான தனிப்பட்ட தரவுகள் அடங்கிய ஆயிரக்கணக்கான பதிவுகள் திருடப்பட்டுள்ளன.
இந்தத் தரவுகளில், மத்திய குடிவரவு தகவல் அமைப்பிலிருந்து பெறப்பட்ட பெயர், வீட்டு முகவரி, பிறந்த திகதி, திருமண நிலை, தொழில் பங்கு மற்றும் அடையாள எண் போன்ற தனிப்பட்ட தரவுகள் அடங்கிய 97,000 பதிவுகள் உள்ளன.

மேலும், ஹக்கர்கள் அந்த மாகாணத்தில் உள்ள முதலாளிகளின் தொடர்பு விவரங்களையும் பெற்றுள்ளனர். இணையப் பாதுகாப்பு நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வுகள் மூலம் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2016 நவம்பர் 28,முதல் எல்லை தாண்டிப் பயணிப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறு மாகாணம் அறிவுறுத்துகிறது. ஃபிஷிங் முயற்சிகள் மற்றும் அடையாளத் திருட்டுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்த மாகாணம், மத்திய இணையப் பாதுகாப்பு அலுவலகம், தரவுப் பாதுகாப்பு மேற்பார்வை ஆணையம், மத்திய வெளியுறவுத் துறை மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக ஒரு குற்றவியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையவழித் தாக்குதலைச் சமாளிப்பதற்காக விரிவான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மூலம்- swissinfo


