சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கொக்கோ வர்த்தக மற்றும் பதப்படுத்தும் நிறுவனமான ‘பேரி காலபோ’ (Barry Callebaut), இந்தியாவின் பாரமதியில் புதிய தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலை, சிறப்பு வகை சொக்லட் தயாரிப்புகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவும்.
தென்கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, தலைநகர் மும்பையிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக ‘பேரி காலபோ’ நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

6,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஆலையில், ஐஸ்கிரீம், பேஸ்ட்ரி, மிட்டாய் வகைகள் மற்றும் இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே அதே பகுதியில் 2017-ல் அமைக்கப்பட்ட மற்றொரு தொழிற்சாலையும் உள்ளது.
இந்த முதலீட்டின் மொத்த மதிப்பு குறித்த விவரங்கள், வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்படவில்லை.


