கடந்த மாதம் பியோங்யொங்கில் திறக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் தூதரக அலுவலகத்தை மூடப்போவதாக வடகொரியத் தலைவரின் செல்வாக்கு மிக்க சகோதரி கிம் யோ ஜோங், அச்சுறுத்தியுள்ளார்.
வட கொரியா மீது சுவிட்சர்லாந்து பொருளாதாரத் தடைகளை விதித்ததற்குப் பதிலடியாகவே கிம் யோ ஜோங்கின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தல் குறித்து AFP தெரிவித்த தகவல்களை வட கொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA, நேற்று ஒளிபரப்பியது.
“என் பார்வையில், சுவிஸ் தூதரகம் அதன் இருப்பிற்கான காரணத்தையே தன்னிச்சையாக இழந்து விட்டது,” என்று கிம் யோ ஜோங் குறிப்பிட்டார்.
அந்த அறிக்கையின்படி, ரஷ்ய மற்றும் சீனக் குழந்தைகள் கலந்துகொண்ட வடகொரியாவில் உள்ள ஒரு விடுமுறைக்கால முகாம் மீது சுவிட்சர்லாந்து விதித்த பொருளாதாரத் தடைகளை அவர் விமர்சித்துள்ளார்.
மூலம்- swissinfo


