சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லே, கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் காரணமாக, கொலம்பியாவில் உள்ள தனது தொழிற்சாலைகளில் ஒன்றை மூடியுள்ளது.
“டோஸ்கெப்ராடாஸில் உள்ள கோமெஸ்டிபிள்ஸ் லா ரோசா தொழிற்சாலையில் எங்களின் உற்பத்தித் திறனில் சுமார் 70% அழிக்கப்பட்டது,” என்று அந்நிறுவனம் கூறியது.

“ஆலையை மதிப்பீடு செய்து சீரமைக்க கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த இடம் பாதுகாப்பாகவும் நீடித்த நிலையிலும் செயல்பட முடியாது என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். எனவே, அதை மூடுவதற்கான கடினமான முடிவை எடுத்தோம்.”
இந்த ஆலை, லத்தீன் அமெரிக்க சந்தைகளுக்காக பிஸ்கட்கள் மற்றும் இனிப்புகளை உற்பத்தி செய்து வந்தது.
இருப்பினும், டோஸ்கெப்ராடாஸ் விநியோக மையம் தொடர்ந்து செயல்படும், அதே நேரத்தில் உணவு மற்றும் கோப்பியை உற்பத்தி செய்யும் புகாலகிராண்டேவில் உள்ள மையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெறும்.
ஓகஸ்ட் 10ஆம்திதி , ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் நாடு முழுவதும் 300 உயிர்களைப் பலிகொண்டது.
மூலம்- swissinfo


