கொரோனா வைரஸ் தொற்று 2019 முதல் 2021 வரை பரவியபோது, உலகளாவிய மனித ஆயுட்காலத்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் குறைத்து, ஒரு தசாப்த முன்னேற்றத்தை அழித்து விட்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்று, பிறக்கும் போதான ஆயுட்காலம் மற்றும் பிறக்கும் போதான ஆரோக்கியமான ஆயுட்காலம் ஆகியவற்றின் நிலையான போக்கை மாற்றியமைத்து விட்டதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், உலகளாவிய சராசரி மனித ஆயுட்காலம் 1.8 ஆண்டுகள் குறைந்து, 71.4 ஆண்டுகளாக குறைந்துள்ளது. இது 2012 இல் இருந்த அளவாகும் என உலக சுகாதார புள்ளிவிவர ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, சராசரியாக மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ எதிர்பார்க்கும் கால அளவு 2021 ஆம் ஆண்டில் 1.5 ஆண்டுகள் குறைந்து 61.9 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதுவும், 2012 ஆம் ஆண்டின் அளவு என்றும், அந்த ஆய்வு கூறுகிறது.