இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கலாம் எனவும் தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
- Advertisement -

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல், சர்வதேச சுற்றுலாப் பயணிகளை தாய்லாந்து நோக்கி ஈர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை உள்ளிட்ட 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு தாய்லாந்திற்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை என, தாய்லாந்து அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


