கணவனை கோடாரியால் தாக்கி கொலை செய்த மனைவியை, பொலிசார் கைது செய்துள்ளனர்.
இபலோகம காந்திரியகம பிரதேசத்தில் வசித்து வந்த புஞ்சி பண்டாகே உக்கு பண்டா என்ற 74 வயதுடைய நபரே மனைவியின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
- Advertisement -

உயிரிழந்த நபர் வீட்டின் வரவேற்பறையில் தரையில் உறங்கிக் கொண்டிருந்த போதே, அவரது மனைவி, இறந்தவரின் தலையில் கோடரியால் வெட்டியுள்ளார்.
படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, உயிரிழந்தவரின் மனைவியான 59 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


