-5.7 C
New York
Sunday, December 28, 2025

புஞ்சி பண்டாவை கோடரியால் வெட்டிக் கொன்ற மனைவி!

கணவனை கோடாரியால் தாக்கி கொலை செய்த மனைவியை, பொலிசார் கைது செய்துள்ளனர்.

இபலோகம காந்திரியகம பிரதேசத்தில் வசித்து வந்த புஞ்சி பண்டாகே உக்கு பண்டா என்ற 74 வயதுடைய நபரே  மனைவியின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வீட்டின் வரவேற்பறையில்  தரையில் உறங்கிக் கொண்டிருந்த போதே,  அவரது மனைவி, இறந்தவரின் தலையில் கோடரியால் வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, உயிரிழந்தவரின் மனைவியான 59 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles