16 C
New York
Tuesday, September 9, 2025

தமிழ்ப் பரீட்சையில் சித்தி பெற்ற சுவிஸ் பிரஜை.

சுவிஸ் பிரஜையொருவர் பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் நடத்தப்படும் தமிழ் பரீட்சையில் சித்திபெற்றுள்ளார்.

சுவிற்சர்லாந்து நாட்டில் பொருளியல் வணிகத்துறையில் முதுகலைமாணி பட்டம் பெற்ற உறோயர், பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தமிழ் கற்று வருகின்றார்.

வளர்நிலை ஒன்றில் (ஆண்டு ஒன்றில்) கற்கும் இவரை சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படி பாடசாலை அதிபர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி விரும்பி விண்ணப்பித்து பரீட்சையில் தோற்றி நூறு புள்ளிக்கு நிகரான ஆறு புள்ளி பெற்றுள்ளார்.

இவர் எழுத்து, பேசுதல், கேட்டு விளங்குதல் மற்றும் வாசிப்பு நிலைகளிலும் மிகச்சிறப்பான தகைமை பெற்றுள்ளதோடு புலம்பெயர்ந்த நாடுகளில் பிற இனத்தாருக்கும் தமிழ் கற்பித்த தமிழ்ப்பள்ளி என்ற பெருமைக்குரிய பள்ளியாக சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி திகழ்கின்றது.

இதற்கு முன்னரும் நான்கு பிற இனச்சிறார்கள் தமிழ் கற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles