சுவிசில் மின்சார கார்களின் விற்பனை குறைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 17,171 புதிய மின்சார கார்கள் சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட மொத்த கார்களின் எண்ணிக்கையில், இது 17.4 சதவீதமாகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மின்சார கார்களின் பதிவு குறைந்துள்ளதாக Auto Schweiz இன் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதற்கு மாறாக, கலப்பு வாகனங்கள் (ஹைபிரிட்) , அதாவது மின்சார மோட்டார் மற்றும் எரிப்பு இயந்திரம் கொண்ட கார்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, பிரபலமடைந்து வருகின்றன.
மின்சாரத்தைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யக் கூடிய கலப்பின கார்கள், மின்சார கார்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
Energie Schweiz மற்றும் Geoimpact வழங்கும் புள்ளிவிபரங்களின்படி, பதிவுசெய்யப்பட்ட அனைத்து கார்களில் முற்றிலும் மின்சாரத்தைப் பயன்படுத்துவது, 3.7 வீதமான கார்களே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மூலம் – The swiss times