அம்பாறை – காரைதீவில் நேற்று இரவு மருத்துவர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
உகந்தைமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று திரும்பபிய போது, பாணமை கடலில் தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட இ.தக்சிதன் என்ற மருத்துவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தார்.
அவரது சடலம் பிரதே பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இருந்து, இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்ட, காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் என்ற மாணவன், உகந்தைமலை முருகன் கோவிலுக்குச் சென்று திரும்பும் போது, லகுகல ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சில நாட்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
இந்த இரண்டு சம்பவங்களும் காரைதீவுப் பகுதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.