2 C
New York
Monday, December 29, 2025

ஜனாதிபதி தேர்தல் திகதியை அரசாங்கம் தீர்மானிக்க முடியாது – ஆணைக்குழு சீற்றம்.

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும் ம் என, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியதை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நிராகரித்துள்ளார்.

தேர்தல் அட்டவணையை நிர்ணயிப்பதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது என்று அவர் கூறினார்.

தேர்தல் திகதியை தீர்மானிக்க, ஜூலை 17 ஆம் திகதி முதல்,  தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் சுயாதீனமாக கூடுவார்கள் என்றும் ரத்நாயக்க தெரிவித்தார்.

அமைச்சரவை அல்லது ஜனாதிபதி உட்பட எந்தவொரு வெளி தரப்பினதும், ஒப்புதலைப்பெற வேண்டிய கட்டாயம் எமக்கு இல்லை. தேர்தல் திகதியை நாங்கள் பகிரங்கமாக அறிவிப்போம்.

செப்ரெம்பர் 17ஆம் திகதிக்குப் பின்னரே தேர்தலை நடத்த முடியும்.

அதற்கு முன்னதாக, நான்கு முதல் ஆறு வாரங்கள் வரையிலான தயாரிப்புக் காலம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

இவற்றைத் தீர்மானிப்பதற்கு தேர்தல் ஆணையக்குழுவுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles