16.5 C
New York
Wednesday, September 10, 2025

ஊடகவியலாளர் வீடு தாக்கப்பட்டதை கண்டித்து நாளை போராட்டம்.

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு விடுக்கப்பட்டுள்ள  உயிர் அச்சுறுத்தலைக் கண்டித்து ,நாளை யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு, அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாதோர் வீட்டை தீயிட்டு எரித்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்திருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும், இதுவரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை.

எனவே தாக்குதலை நடத்திய  குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோரியும்,  தாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்தும் வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள்  இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என, அனைவரையும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles