2.1 C
New York
Thursday, February 12, 2026

சுவிசில் சிக்கிய ரஷ்ய உளவாளி- அமைதி மாநாட்டுக்கு ஆபத்தை விளைவிக்க முயற்சி.

பெர்கன்ஸ்ரொக்கில் உக்ரைன் அமைதி மாநாட்டிற்கு முன்னதாக, பேர்ணில் இராஜதந்திரியாக பணியாற்றிய ரஷ்ய புலனாய்வு முகவர் ஒருவர்,  சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிகள், கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த முகவர், ஆயுதங்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை வாங்க விரும்பி தொடர்புகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ரஷ்ய இராஜதந்திரி மற்றும் அவரது வட்டத்தில் உள்ளவர்கள் மீதான விசாரணையை கூட்டாட்சி சட்டமா அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

ஆரம்ப பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட கன்டோன் பொலிசாருடன் இணைந்து பல வீடுகளில் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்திய சட்டமா அதிபர் அலுவலகம் யாரேனும் கைது செய்யப்பட்டனரா என்பது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

தற்போது 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

போர் பொருள் மற்றும் தடைச் சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும், ரஷ்ய இராஜதந்திரியின் தொடர்புகள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

மற்றொரு சந்தேக நபர் சரக்கு கட்டுப்பாடு மற்றும் தடைச் சட்டத்தை மீறியதாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பொருட்கள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ரஷ்ய இராஜதந்திரியின் சிறப்புரிமை காரணமாக அவரை சந்தேக நபராக இலக்கு வைக்க முடியாது.

எனினும், இந்த சிறப்புரிமை பாதுகாப்பை நீக்குமாறு சட்டமா அதிபர் அலுவலகம், வெளிவிவகாரத் திணைக்களத்திடம் கோரியுள்ள போதும், ரஷ்ய இராஜதந்திரி ஏற்கனவே சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறிவிட்டார்.

ஆனால் பேர்ணில் ரஷ்ய தூதரகத்தின் பேச்சாளரிடம் இதுபற்றிக் கேட்ட போது,  சுவிசில் இருந்து ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவது பற்றிய எந்த தகவலும் தங்களிடம் இல்லை எனக் கூறியுள்ளார்.

பலர் தற்போது விடுமுறையில் உள்ளனர், இது கோடைக்காலத்திற்கு இயல்பானது, அவர்கள் திட்டமிட்டபடி திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

ஆங்கில மூலம் – 20 min.

Related Articles

Latest Articles