-5.7 C
New York
Sunday, December 28, 2025

வைரலாகியது தர்ஜினியின் திருமணம்.

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை என்ற பெருமையை பெற்ற,  தர்ஜினி சிவலிங்கம் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில், அவரது திருமண காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனை சொந்த இடமாக கொண்ட தர்ஜினி சிவலிங்கம் வசாவிசான் மத்திய கல்லூரியின் பழைய மாணவியாவார்.

இவர் , 2009 ஆம் ஆண்டு முதல் , இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் இணைந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்தார்.

அதன் பின்னர் இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து கடந்த வருடம் ஓய்வுபெற்ற போதும்  அவுஸ்ரேலியாவின் ஃபால்கன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாடி வருகின்றார்.

இலங்கைக்காக அதிக வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டவர் எனும் பெருமையை பெற்ற தர்ஜினி , இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் பொறுப்பினையும் 2012ஆம் ஆண்டு வகித்திருந்தார்.

தென்னாபிரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் – இலங்கை சார்பாக விளையாடிய பின்னர், தனது ஒய்வை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந் நிலையில் நேற்றையதினம் திருமண பந்தத்தில் இணைந்த தர்ஜினி சிவலிங்கத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றார்கள்.

Related Articles

Latest Articles