2.1 C
New York
Thursday, February 12, 2026

சூரிச்சில் ரயில் மோதி ஒருவர் பலி- இன்று மதியம் சம்பவம்.

ஷாஃப்ஹவுசெனில் ( Schaffhausen )  இருந்து சூரிச் நோக்கி பயணித்த ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று மதியம் 1:00 மணிக்கு சற்று முன்னர் இந்த விபத்து,  நியூஹவுசென்  ஆம் ரெய்ன்போலில் உள்ள  ரெய்ன்போல்  ரயில் நிலையம் அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

விபத்து இடம்பெற்ற சூழ்நிலைகள் தொடர்பாக, விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஷாஃப்ஹவுசென் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த  ரயிலில் சுமார் 200 பேர் பயணம் செய்தனர். அவர்கள் மீட்புப் பணியாளர்களால், வெளியேற்றப்பட்டு, மாற்று ரயிலில் தங்கள் பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விபத்தை அடுத்து.  ரெய்ன்போல் ரயில் நிலையத்தில் ரயில்வேயின் இரண்டாவது பகுதி மாலை 4 மணி வரை மூடப்பட்டது. மாற்றுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆங்கில மூலம்- 20min

Related Articles

Latest Articles