14.6 C
New York
Sunday, September 27, 2026

சுவிஸ் டிண்டிகோனில் பாரிய தீவிபத்து.

சுவிசின் ஆர்கோ கன்டோனில் உள்ள டிண்டிகோனில் நேற்று மதியம்  பாரிய தீ விபத்து ஏற்பட்டதால், நகரத்துக்கு மேலாக பாரிய புகை மண்டலம் எழுந்தது.

ஒரு கட்டடம் மற்றும் ஒரு வாகனம் என்பன தீப்பற்றி எரிந்ததாக ஆர்கோ பொலிசார் உறுதிப்படுத்தினர்.

- Advertisement -

அருகில் குடியிருப்பவர்கள், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி,வெளிப்புற காற்றோட்டத்தை குறைக்குமாறும் பொலிசாரால் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த தீவிபத்தினால் எவருக்கும்  காயம் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles