கிராபண்டன் கன்டோனில் நேற்றுக் காலை பெர்னினா சூட் அருகே ஒரு ரயில்வே கட்டுமான வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் வார இறுதியில் இந்தப் பாதை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், திங்கட்கிழமை காலை வரை பெர்னினா சூட் நிலையம் செயற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென் மோரிட்ஸ் மற்றும் பொன்ட்ரெசினா இடையே மற்றும் டிரானோ மற்றும் ஓஸ்பிஜியோ பெர்னினா இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பொன்ட்ரெசினா மற்றும் போஸ்சியாவோ இடையே மாற்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேவேளை, பெர்னினா எக்ஸ்பிரஸ் ரயில்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்படும்.
பெர்னினா எக்ஸ்பிரஸ் பயணங்கள் குறித்து இன்று ஆய்வு செய்யப்படும என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மூலம் – 20min