சக் (Zug) ஏரியில் Oberwil அருகே பாய்மரப் படகு ஒன்று மூழ்கிய விபத்தில், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்றுப் பிற்பகல், 1 மணிக்குப் பின்னர், கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டது.
விபத்து நடந்த போது, பாய்மரப் படகில் மூன்று பேர் இருந்தனர்.
அவர்களில், 40 மற்றும் 70 வயதுடைய இருவர், மற்றொரு படகில் இருந்த பணியாளர்களால் மீட்கப்பட்டனர்.
56 வயதுடைய மூன்றாவது நபர், காணாமல் போயுள்ளார் என சக் பொலிசார் தெரிவித்தனர்.
அவரையும் மூழ்கிய படகையும் தேடும் பணி உடனடியாக தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மோசமான வானிலையால் மீட்பு பணிகள் கடினமானதாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணியில் ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மூலம் – 20min