சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில், கனமழையால் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டுள்ளதுடன், சேமாட் (Zermatt) பகுதி வெளிஉலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவினால் கிராபண்டனில் ( Graubünden) மோசமான மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
லொஸ்டாலோவில் கணவன் – மனைவியும், வயோதிப பெண் ஒருவருமே, காணாமல் போயுள்ளனர் இவர்களைத் தேடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காணாமல் போயிருந்த பெண் ஒருவர் நேற்றுக் காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மண்சரிவு, சேற்றுடன் கூடிய வெள்ளத்தினால் மிசொக்ஸ் பள்ளத்தாக்கில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்தப் பகுதியில் இருந்து 230 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் ரயில் பாதைகள், வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதால், விஸ்ப் – டாஸ் இடையிலான ரயில் சேவைகள் ஜூன் 29ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
வெள்ளம் காரணமாக, A13 நெடுஞ்சாலையில் கபியோலோவிற்கும் அராவிற்கும் இடையில் ஒரு பகுதி நீண்டகாலத்திற்கு மூடப்பட்டிருக்கும்.
இந்தப் பகுதியில் 200 மீற்றர் நீளத்துக்கு நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கிராபண்டன் கன்டோனில் உள்ள மிசொக்சில 24 மணிநேரத்தில், 125 மி.மீ மழை கொட்டியதாகவும், 7000 தடவைகள் மின்னல் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் இன்றும் நாளையும் வானிலை சீராக இருக்கும் என்றும் செவ்வாயன்று மீண்டும் மழை பெய்யக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மூலம் – 20min