0.8 C
New York
Monday, December 29, 2025

அவசரமாக கூட்டப்படுகிறது நாடாளுமன்றம்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின்  வேண்டுகோளுக்கிணங்க ஜூலை  2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை  9.30 மணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

16ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம்  அழைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு சகல  நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டிக் கொள்வதாக சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு முடிந்து சபை ஒத்திவைக்கப்பட்டபோது எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடுமென அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே தற்போது பிரதமர் தினேஷ் குணவர்தனவின்  வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்றம் ஜூலை  2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

இந்த விசேட அவசர கூட்டத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

Related Articles

Latest Articles