21.6 C
New York
Wednesday, September 10, 2025

செல்வச்சந்நிதியில் விற்கப்பட்ட மிக்சருக்குள் பொரிந்த நிலையில் பல்லி.

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயச் சூழலில் அமைந்துள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மிக்சரில் பொரிந்த நிலையில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு ஒருவருக்கு விற்கப்பட்ட மிக்சருக்குள், பல்லியொன்று பொரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

அதனை வாங்கியவர் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதையடுத்து,  அவ்விடத்திற்கு விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகர், பல்லியுடன் விற்கப்பட்ட மிக்சரை சட்டநடவடிக்கைக்காக கைப்பற்றினார்.

சில மாதங்களுக்கு முன்னர், செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறிமுக்குள்  தேரை ஒன்று காணப்பட்டது.

இதையடுத்து, அதனை விற்பனை செய்தவர், நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles