0.9 C
New York
Thursday, February 12, 2026

ரஷ்ய உளவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சுவிஸ் அரசிடம் செனட் வலியுறுத்தல்.

ரஷ்ய உளவாளிகளை வெளியேற்றுவதன் மூலம், சட்டவிரோத புலனாய்வுத் துறை நடவடிக்கைகளால் சுவிஸ் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள், குறித்து கடுமையாக நடந்து கொள்ளுமாறு சுவிஸ் அரசாங்கத்திற்கு பாராளுமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பிரதிநிதிகள் சபையின் இந்த கருத்தை செனட்டும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை செனட் வெளியுறவுக் குழுவின் பரிந்துரையைப் பின்பற்றி,  இததொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக செனட் சபையில் 32 வாக்குகள் அளிக்கப்பட்டன.  எதிராக ஒன்பது வாக்குகள் அளிக்கப்பட்ட அதேவேளை,, இரண்டு பேர் வாக்களிக்கவில்லை.

சர்வதேச அமைப்புகளின் இடமாகவும், ஐரோப்பாவின் மையத்தில் உள்ள நாடாகவும் விளங்கும் சுவிட்சர்லாந்து புலனாய்வு சேவைகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக இருப்பதாக செனட் குழுவின் பேச்சாளர் ஃபிரான்சிஸ்கா ரோத் கூறினார்.

மத்திய புலனாய்வு சேவையின் (எப்ஐஎஸ்) அறிக்கைகளின்படி, ஐரோப்பாவில் நிலை கொண்டுள்ள ஐந்து ரஷ்ய புலனாய்வு அதிகாரிகளில் ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருக்கிறார்.

இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஜெனீவாவில் வழங்கப்படும் பாதுகாக்கப்பட்ட சர்வதேச உரையாடல் இடங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இந்த நடவடிக்கைகள் சுவிட்சர்லாந்தின் இராஜதந்திர நலன்களுக்கும் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

தடைசெய்யப்பட்ட புலனாய்வு சேவைகள் சுவிட்சர்லாந்தின் முக்கியமான தகவல் மற்றும் இரகசியங்களுக்கு மட்டுமன்றி,  சில சமூகங்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

 இது ஒரு புரவலர் நாடு என்ற சுவிட்சர்லாந்தின் நற்பெயரையும் சேதப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் – swissinfo

Related Articles

Latest Articles