30.1 C
New York
Wednesday, August 12, 2026

சுவிசை மீண்டும் மிரட்டிய மழை – வீடுகள், வீதிகளுக்குள் வெள்ளம்.

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் நேற்று மீண்டும் இடி மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாஸல்-லாண்ட் பகுதி ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டது.

வீதிகள் மற்றும் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அடித்தளங்களில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது.

சொத்து சேதங்கள் குறித்த எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை.

அடுக்குமாடி குடியிருப்புகள் சிலவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தீயணைப்பு பிரிவினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு சுவிற்சர்லாந்தின் மோர்ஜ் நகரில் நேற்றுமாலை பெய்த கனமழையினால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆங்கிலம் மூலம் – 20min.

Related Articles

Latest Articles