28.4 C
New York
Thursday, August 13, 2026

ஜேர்மனி-  சுவிஸ் எல்லைக்கு அருகில் அதிகாலையில் நிலநடுக்கம்.

ஜேர்மனி-  சுவிஸ் எல்லைக்கு அருகில் இன்று அதிகாலை 3:06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சூரிச் இல் உள்ள சுவிஸ் நில அதிர்வு சேவையின் தகவலின் படி, லாபென்பேர்க்கிற்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில், இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

7.6 கிலோமீட்டர் ஆழத்தில் இடம்பெற்ற இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.2 அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் சுவிட்சர்லாந்து முழுவதும் உணரப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவிலான நிலநடுக்கம்,  மையப்பகுதிக்கு அருகில் சிறியளவிலான சேதங்களையே ஏற்படுத்தக் கூடியது.

நிலநடுக்கம் வடக்கு ஆர்கோவில் தெளிவாக உணரப்பட்டது  என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மூலம் -20 min

Related Articles

Latest Articles