25.4 C
New York
Thursday, August 13, 2026

சுவிசில் பற்றியெரியும் மிட்சுபிஷி தொழிற்சாலை.

லென்ஸ்பர்க்கில்  உள்ள தொழிற்சாலைப் பகுதியில் இன்று காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மிட்சுபிஷி கெமிக்கல் அட்வான்ஸ்ட் மெட்டீரியல்ஸ்  நிறுவனத்துக்குச் சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலையிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில், பொலிஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என ஆர்கோ கன்டோனல் பொலிசார் உறுதிப்படுத்தினர்.

தீவிபத்தை அடுத்து, சுமார் 50 பேர் அங்கிருந்து  வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஆர்கோ கன்டோனல் பொலிஸ்  ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

ஆங்கிலம் மூலம் -20 min

Related Articles

Latest Articles