19.8 C
New York
Thursday, September 11, 2025

வெள்ளம் புகுந்ததால் 3 நாட்களாக வெந்நீர் இல்லை – லீஸ்டால் மக்கள் தவிப்பு.

கடந்த செவ்வாய்க்கிழமை  சூறைக் காற்றுடன் பெய்த மழையைத் தொடர்ந்து, லீஸ்டால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள  பகுதிகளில் வெந்நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல், பாசல்-லாண்ட் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையினால், வெள்ளம் ஏற்பட்டது.

இதன்போது, லீஸ்டாலில் உள்ள மாவட்ட வெப்பஆற்றல் மையமும் வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால், அப்பகுதி மக்கள் வெந்நீரின்றி தவித்து வருகின்றனர்.

தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ள போதும், மின்சார அமைப்பு மோசமாக சேதமடைந்துள்ளதால், வழக்கமான செயற்பாடுகளை மீண்டும் தொடங்க முடியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆங்கிலம் மூலம் – 20min

Related Articles

Latest Articles