ஹண்ட்விலில் உள்ள பண்ணை ஒன்று மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்தது.
நேற்றுக்காலை 9 மணியளவில், ஹண்ட்வில்லில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பண்ணை வீடு மின்னல் தாக்கி எரியத் தொடங்கியதாக Appenzell Ausserrhoden கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
பண்ணை வீட்டில் இருந்தவர்கள் மற்றும் கால்நடைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதும், அங்கிருந்த பொருட்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மூலம் – 20min