வவுனியா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர், அங்கிருந்து தப்பிச் சென்ற போது வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவரே உயிரிழந்தவராவார்.
வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியவீதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவர், ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியவீதியிலிருந்து விடுகை பெறாது இரவு நேரம் தப்பிச் சென்ற போதே, வீதியால் சென்ற வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
அவரை மோதிய வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.