16.7 C
New York
Sunday, September 27, 2026

சூரிச்சில் கூடாரத்துக்குள் வளர்க்கப்பட்ட 1700 கஞ்சா செடிகள்- ஒருவர் கைது.

நூரன்ஸ்ரோபில், (Nürensdorf) சட்டவிரோதமாக கூடாரத்துக்குள் வளர்க்கப்பட்ட,  1,700 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளைக்  கொண்ட தோட்டம்  செவ்வாயன்று காலை, கண்டுபிடிக்கப்பட்டது.

செவ்வாய்கிழமை காலை, சணல் தோட்டத்துக்கான உட்புற வசதியை பொலிசார் சோதனையிட்ட போது, அங்கு சணலுக்கு பதிலாக, 1,700 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

- Advertisement -

மேலும், விற்பனைக்கு தயாராக இருந்த ஒரு கிலோகிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

அந்த கஞ்சா தோட்டத்தை நடத்தி வந்த 33 வயதுடைய நபர் செய்யப்பட்டார்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles