சூரிச் விமான நிலையத்தில் கைப்பைகளை சோதனையிடும் புதிய பாதுகாப்பு சோதனை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பல விமான நிலையங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கணினி டோமோகிராபி ஸ்கானர்கள் இப்போது, சூரிச் விமான நிலையத்திலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதன் மூலம், பயணிகள் தமது கையில் எடுத்துச் செல்லும் பொதியின் பாதுகாப்பு சோதனைகளை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு போத்தல் வாசனை திரவியம், அருந்துவதற்கான பானம், மற்றும் மடிகணினி போன்றவற்றையும் கைப் பையில் வைத்திருக்க முடியும்.
மூலம் – zueritoday