சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கிறீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் இந்திரா கஹ்விட்ட தெரிவித்தார்.
கொழும்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
”உலக சுகாதார அமைப்புக்கும் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் இடையில் பாதரச பாவனையை முற்றிலுமாக ஒழிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடந்து வருகிறது.
இதற்கமைய பாதரசத்தின் அளவு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். இப்போது இது முழுமையாக பயன்படுத்தப்படுகின்றது.
அதிகளவு பாதரசம் பயன்படுத்தப்படுவதால், சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகின்றன.
24 மணி நேரத்தில், நான் 40 கிளினிக்குகளில் இருந்து தோராயமாக 60 நோயாளிகளை பரிசோதித்தேன். மொத்தத்தில், 06 நோயாளிகள், அதாவது 10 வீதமானோர், வெண்மையாக்கும் கிறீம்களால் ஏற்படும் பிரச்சினைகளுடன் வருகை தருகின்றனர்.
இப்போது, உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் கருப்பு நிறமாக மாறுகிறது. இதற்குப் பொதுவான காரணி வெள்ளையாக்கும் கிறீம்கள் தான்.
மேலும், நகங்கள் பழுப்பு நிறமாக, ஓரேஞ் நிறமாக மாறும். இதனால் உயிர் சேதம் கூட ஏற்படலாம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.