பேர்னில் உள்ள வாட்டன்வில் என்ற இடத்தில் ஏடிஎம் மையத்தை அடையாளம் தெரியாத நபர்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பெரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அருகில் வசிக்கும் இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த ஏடிஎம் மையம் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த வெடிப்பினால் பாதிக்கப்பட்ட இருவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்
குற்றவாளிகள் இ-ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றதாக ஒருவர் தெரிவித்தார்.
“அவர்கள் தங்கள் வாகனங்களை தபால் அலுவலக விநியோக வான்களுக்கு இடையில் மறைத்து நிறுத்தியிருந்திருக்கலாம். ஒரு கார் இன்னும் பின்னால் காத்திருந்தது, அவர்கள் தப்பிக்க அவற்றைப் பயன்படுத்தினர்.” என்றும் அவர் கூறினார்.
அதேவேளை சம்பவத்தை நேரில் பார்த்த தம்பதியினர், குற்றவாளிகள் இருவர் முக கவசம் அணிந்தவாறு இரண்டு இ-ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
மூலம் – 20min