-0.7 C
New York
Sunday, December 28, 2025

சுவிசில் 2023இல் உச்சத்தை எட்டிய கருக்கலைப்பு.

சுவிட்சர்லாந்தில்  2023 ஆம் ஆண்டில், கருக்கலைப்புகளின் எண்ணிக்கை  சாதனை அளவை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு, 12,045 கருக்கலைப்புகள் சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளன. எனினும், 2022ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை  11,374 ஆக பதிவாகி இருந்தது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில்,  15 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட, 1,000 பெண்களுக்கு, 7.3  என்ற விகிதத்தில், கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.

இது, 2022 ஆம் ஆண்டில், 1,000 பெண்களுக்கு 7 என்ற விகிதத்தில் காணப்பட்டது.

எனினும், 15 முதல் 19 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினர் மத்தியில், கருக்கலைப்பு விகிதம் குறைந்த அளவில் உள்ளது.

இது1,000 பெண்களுக்கு 3.4 என்ற விகிதத்தின் அடிப்படையில் நிலையானதாக உள்ளது.

பெரும்பாலான கருக்கலைப்புகள், 95% கர்ப்பத்தின் முதல் பன்னிரண்டு வாரங்களிலும், 77% முதல் எட்டு வாரங்களிலும் நடைபெறுகின்றன.

81% கருக்கலைப்புகள், மருந்து மூலமும்,  19% கருக்கலைப்புகள் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles