16.7 C
New York
Sunday, September 27, 2026

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத் தமிழ்ப்பெண்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முதல் ஈழத் தமிழ்ப் பெண் காலடி எடுத்து வைக்கிறார்.

நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் Stratford and Bow தொகுதியில் போட்டியிட்ட உமா குமரன், 11 ஆயிரத்து 634 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

- Advertisement -

அவருக்கு, 19,145 (44.1%) வாக்குகள் கிடைத்துள்ளன.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பசுமைக் கட்சி வேட்பாளர் 7,511 (17.3%)வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள  முதலாவது ஈழத் தமிழர் இவராவார்.

Related Articles

Latest Articles