25 C
New York
Sunday, June 28, 2026

காலிறுதி ஆட்டத்தில் சுவிஸ் அணி தோல்வி – ரசிகர்கள் ஏமாற்றம்.

ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சுவிற்சர்லாந்து அணி தோல்வியடைந்துள்ளது.

நேற்று மாலை நடந்த காலிறுதி ஆட்டத்தில் சுவிற்சர்லாந்து அணி, பிரித்தானிய அணியுடன் மோதியது.

ஜெர்மனியின், டுசெல்டார்ஃப் நகரில் 46 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவு பெனால்டி உதை மூலம் தீர்மானிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட பெனால்டி உதை வாய்ப்பில் பிரித்தானிய அணி 5- 3 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

காலிறுதி ஆட்டத்தில் சுவிஸ் அணி தோல்வியைத் தழுவியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் உள்ளிட்ட பல பகுதிகளில் பொது அரங்குகளில் மழைக்கும் மத்தியில் குடை பிடித்துக் கொண்டும், மழையில் நனைந்து கொண்டும் இந்தப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.

பல இடங்களில் கடும் மழை மற்றும் காற்றினால் பொது அரங்குகள் சேதமடைந்தன.

Related Articles

Latest Articles