21.2 C
New York
Thursday, August 13, 2026

நீர்த்தேக்கத்தில் மூழ்கிய கார் – மோட்டார் சைக்கிள் ஓட்டிகளால் சாரதி மீட்பு.

குட்டனனில் வெள்ளிக்கிழமை மாலை,  இடம்பெற்ற விபத்தை அடுத்து நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து கார் ஒன்றை பேர்ன் கன்டோனல் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

வெள்ளி மாலை 6.30 மணியளவில், குட்டன்னெனில் உள்ள நீர்த்தேக்கத்தில் கார் ஒன்று மூழ்கியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில், Geissgufer பகுதியில் Räterichsbodensee நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டது.

விபத்தை அடுத்து கார் நீர்த்தேக்கத்தில் விழுந்ததாகவும் அவ்வழியே சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள், மூழ்கி கொண்டிருந்த காரில் இருந்த சாரதியை மீட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த சாரதி, ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மூலம் -20min.

Related Articles

Latest Articles