17.5 C
New York
Sunday, September 27, 2026

இரா.சம்பந்தனின் உடல் தீயுடன் சங்கமம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்றக் குழுத் தலைவர்  இரா. சம்பந்தனின், பூதவுடல் இன்று மாலை திருகோணமலையில் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமித்தது.

இரா.சம்பந்தனின் பூதவுடல் இன்று மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து, சமயக் கிரியைகள் இடம்பெற்றன. இதன் பின்னர், இறுதி நிகழ்வில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார்கள்.

பிற்பகல் 4 மணியளவில் பூதவுடல், திருகோணமலை இந்து  மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  திருகோணமலையில் உள்ள இரா. சம்பந்தனின் இல்லத்தில் நடந்த இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு  அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரையும் நிகழ்த்தினார்.

மேலும்.  பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை , இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன்,  ரிஷாட் பத்யூதீன், உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும்  கலந்து கொண்டு இரா.சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Articles

Latest Articles