டீட்ச்வில் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 12:15 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீட்புக் குழுவினர் சென்ற போது, மரத்தாலான கட்டடம் முழுவதுமாக எரிந்து கொண்டிருந்தது என, பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அந்த வீட்டில் இருந்த மூவர் பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர் என்றும், ஒருவர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் சடலம் ஒன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அவர் காணாமல் போனவராக இருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.