7.7 C
New York
Monday, March 30, 2026

ஜனாதிபதி தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா?- இன்று விசாரணை.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

டி சி லெனாவ என்ற வர்த்தகரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணப்படுவதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய நீதிமன்ற விசாரணையின் பின்னர், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், தேர்தல் திகதியை அறிவிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles