20.1 C
New York
Wednesday, September 10, 2025

அமெரிக்காவிடம் வாங்கும் போர் விமானங்கள்- மறுசீரமைப்பு செலவை சுவிஸ் ஏற்க வேண்டும்.

அமெரிக்க நிறுவனமான லொக்ஹீட் மார்ட்டினிடம் இருந்து சுவிஸ் அரசு வாங்கவுள்ள எவ்-35 போர் விமானங்களை மறுசீரமைப்பதற்கு சுவிஸ் அரசே பணத்தைச்  செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமஷ்டி ஆயுதப் பணியகம் இதனைஉறுதிப்படுத்தியது.

அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 36 போர் விமானங்களை வாங்குவதற்கு சுவிட்சர்லாந்து அரசுக்கு ஆறு பில்லியன் பிராங்குகள் செலவாகும்.

இந்தப் போர் விமானங்களின் மறுசீரமைப்புக்கான செலவை வாடிக்கையாளர்களே ஏற்க வேண்டும் என்று அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

2027ல் சுவிட்சர்லாந்திற்கு இந்தப் போர் விமானங்கள் விநியோக்கப்பட ஆரம்பிக்கப்படும்.

2020 செப்ரெம்பரில், சுவிஸ் வாக்காளர்கள் புதிய போர் விமானங்களை வாங்குவதற்கு ஆதரவாக 50.1 சதவீதம் என்ற மிகக் குறுகிய வித்தியாசத்தில் ஆதரவு வழங்கியிருந்தனர்.

 மூலம் – The swiss times

Related Articles

Latest Articles