20.3 C
New York
Saturday, June 21, 2025

சீன மொழியில் அச்சிடப்பட்ட மென்பானங்கள் விற்பது சட்டவிரோதம்.

ஓல்டனில் (Olten) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், சீன மொழியில் அச்சிடப்பட்ட மென்பானங்கள் விற்பனைக்கு விடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு பன்டா மென்பானத்தை வாங்கிய அருந்திய ஒருவர் வழக்கத்தை விட அதிக இனிப்புடன் கூடியதாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

தனியே சீனாவின் மண்டரின் மொழியில் மென்பானங்களின் லேபிள் அச்சிடப்பட்டுள்ளது.

சுவிஸ் சட்டங்களின்படி இது தவறாகும். சுவிஸ் சட்டத்தின்படி, முற்கூட்டியே பொதியிடப்பட்ட பொருட்களின் லேபிள் சுவிசின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

சீன மொழியிலான லேபிளுடன் விற்பனைக்கு விடப்பட்டுள்ள மென்பானங்கள் சுவிஸ் சட்டத்துக்கு முரணானது என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு நிறுவகமும், சொலத்தூன் சுகாதார அதிகார சபையும் தெரிவித்துள்ளன.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles